
முழுக்க காதலின் மெல்லிய உணர்வுகளின் பதிவுகளாய் திகழும் இனியவனின் கவிதைகள் வெளியான சில நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
காதலைபாடாத தேசமும் இல்லை, காதலைபாடாத உள்ளமும் இல்லை...
இதோ உங்களின் பார்வைக்கு "எனை ஒவ்வொரு நாளும் செதுக்குகிறாயின் சில வரிகள்:-
எத்தனையோ பெண்கள்
அழகாய் இருக்கலாம்
ஆனால் நீதான் என்னை
அழகாகியவள்...
என்னால் சொல்ல முடியாத
எவ்வளவோ காதலை
நீ சாதாரணமாய் சொல்லி விடுகிறாய்
உன் ஒரு பார்வையில்...
உன்னை காதலிக்க துவங்கிய பிறகு
பொய் பேச கூடாதென்றால்
பொய் பேசாமல்
எப்படித்தான் காதலிப்பது .
No comments:
Post a Comment